மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை!

தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போட தேவையில்லை என மருத்துவர் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது தணிந்து வருகிறது. இந்த அலை முடிவடைவதற்குள் மூன்றாவது அலை வரும் என மருத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தினால்தான் அடுத்த அலையை எதிர்கொள்ள முடியும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இதனால், முன்பு அச்சம் கொண்ட மக்கள், தற்போது ஆர்வமுடன் தடுப்பூசி போட முன்வருகின்றனர். இந்த நிலையில் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், யார் யாருக்கு தடுப்பூசி தேவை என்பது குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள், கொரோனா தடுப்புக்கான தேசிய பணிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மருத்துவ வல்லுநர்கள் குழு பிரதமர் நரேந்திர மோடியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அதில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம் இல்லை என்றும் கொரோனா தொற்று உறுதியான பிறகு தடுப்பூசி செலுத்துவது பயன் தரும் என்பதற்கான சான்றுகளை திரட்டிய பிறகு தடுப்பூசி செலுத்தலாம். ஏனெனில், தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு இயற்கையாகவே ஆன்டிபாடிகள் அவர்கள் உடலில் இருக்கும்.

சிறுவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஒட்டுமொத்தமாக தடுப்பூசி போடுவதை விட, பலவீனமானவர்களுக்கும், தொற்று ஏற்படக் கூடிய ஆபத்து உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடுவதையே இலக்காக கொள்ள வேண்டும்.

அதிக மக்களுக்கு பாரபட்சமின்றி அரைகுறையாக தடுப்பூசி போடுவது, உருமாறி கொரோனா பாதிப்புகளை ஏற்படுத்தும்

அதிகமாக நோய் தொற்று பரவும் இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்துவது அவசியம். டெல்டா வகை தொற்று பரவ அதிகமுள்ள பகுதியில் மக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கான கால இடைவெளியை குறைக்கலாம். இதை கருத்தில் கொண்டு கிராமப்புற சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசிகளை அதிகப்படுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் தொற்றுக்கு ஆளானார்கள். இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வில்,”தடுப்பூசி போட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டாலும், அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்றும், ஆனால்,மீண்டும் தொற்றுக்கு ஆளாவதை தடுப்பதில் உத்தரவாதம் இல்லை என்றும் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

வெள்ளி 11 ஜுன் 2021