மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

மதிப்பெண்களுடன் கூடிய சான்றிதழ் : அன்புமணி வலியுறுத்தல்!

மதிப்பெண்களுடன் கூடிய சான்றிதழ் : அன்புமணி வலியுறுத்தல்!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய சான்றிதழ் வழங்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கடந்தாண்டு போல, இந்தாண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்தாண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில், பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்களை குறிப்பிடாமல் ,பாட வாரியாக தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

”மதிப்பெண் இல்லாமல் வெறும் தேர்ச்சி என்று குறிப்பிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்” என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில், “மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழில் எந்த மதிப்பெண்ணும் குறிப்பிடப்படாது என்றும், தேர்ச்சி என்ற குறிப்பு மட்டுமே இடம்பெறும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை உண்மை என்றால் அரசின் முடிவு மிகவும் தவறானது.

மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படவில்லை என்றால், பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு, பின்னாளில் பத்தாம் வகுப்பை கல்வித் தகுதியாக கொண்ட அரசு பணிகளுக்கு செல்வதிலும், மேல்நிலை வகுப்புகளில் சேர்வதிலும் சிக்கல் ஏற்படக்கூடும்.

கொரோனாவால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட கடந்த ஆண்டு கூட சான்றிதழ்களில் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மதிப்பெண்கள் வழங்கப்படாவிட்டால், அதுவே மாணவர்களையும், அவர்களின் கல்வித்திறனையும் சிறுமைப்படுத்தும் செயலாகிவிடும்.

2020-21 கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்தது 3 அல்லது 4 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு ஆணையிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

-வினிதா

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

வெள்ளி 11 ஜுன் 2021