மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

மின் கட்டணம் : பாஜக பிரமுகருக்கு அமைச்சர் விளக்கம்!

மின் கட்டணம் : பாஜக பிரமுகருக்கு அமைச்சர் விளக்கம்!

கவன ஈர்ப்புக்காக ஆதாரமற்ற, பொதுப்படையான குற்றச்சாட்டுகளை மின்சார வாரியம் மீது வைப்பதை தவிர்க்க வேண்டும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிய ஆட்சி தொடங்கியதிலிருந்தே மின் தடை குறித்தும், மின் கட்டணம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழக பாஜக செய்திதொடர்பாளர் நாராயணன் திருப்பதி நேற்றிரவு ட்விட்டரில், “சென்ற வருட ஊரடங்கின்போது மின்கட்டணங்கள் குறித்து மிக பெரிய புகாரை எழுப்பிய திமுக மற்றும் அது குறித்து விவாதம் நடத்திய ஊடகங்கள், இந்த ஊரடங்கில் பன்மடங்கு மின் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து வாய் மூடி மௌனம் காப்பது ஏன்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரிலேயே விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில், ”மின்கட்டணம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

2019 மே மாத மின் கட்டணம்

கடந்த மாத மின் கட்டணம்

இம்மாத ரீடிங்கை வாட்ஸ் அப்பில் அனுப்பி, அதன் அடிப்படையில் மின் கட்டணம்.

இந்த மூன்றில் பொதுமக்கள் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து மின் கட்டணம் செலுத்தலாம். குழப்பங்கள் இருந்தால் தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தவர்,……….. ”கவன ஈர்ப்புக்காக ஆதாரமற்ற, பொதுப்படையான குற்றச்சாட்டுகளை மின்சார வாரியம் மீது வைப்பதை தவிர்க்கவும். அனைத்து விதத்திலும் மிகச் சிறந்த துறையாக மாற்றிட கடை நிலைப் பணியாளர் வரை தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். முதலமைச்சர் எங்களிடம் அதைத்தான் வலியுறுத்தி இருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு நாராயணன் திருப்பதி “தங்களின் விளக்கத்திற்கு நன்றி. ஆதாரமில்லாத குற்றச்சாட்டு அல்ல. பொது மக்களில் பலர் பொதுவாக வைத்த குற்றச்சாட்டே. தங்களின் விளக்கம் தெளிவாக இருந்தாலும், இதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது அரசின் கடமை. மக்கள் நலனில் அரசோடு இணைந்து பணியாற்றவே என் விமர்சனம்’’என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வெள்ளி 11 ஜுன் 2021