மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

பாஜகவினரை சூடேற்றிய ரங்கசாமி: அமைச்சர்கள் பதவியேற்பு கேள்விக்குறி!

பாஜகவினரை சூடேற்றிய  ரங்கசாமி: அமைச்சர்கள் பதவியேற்பு கேள்விக்குறி!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராகப் பொறுப்பேற்று ஒரு மாதம் கடந்தபோதும், அமைச்சர்கள் பதவியேற்காமலும், சபாநாயகரைத் தேர்வுசெய்யாமலும் காலதாமதமாகிவருகிறது.

என்.ஆர்.காங்கிரஸ் பத்து இடங்களிலும், பாஜக ஆறு இடங்களிலும் வெற்றிபெற்று கூட்டணி ஆட்சி அமைக்கத் திட்டமிட்டாலும், துணை முதல்வர் உட்பட மூன்று அமைச்சர்கள் அவர்களுக்கு முக்கிய துறைகள் என கேட்டது பாஜக. ஆனால், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி துணை முதல்வர் தரமுடியாது அதற்கான மத்திய அரசு வழிகாட்டுதல் இல்லை, எப்போதும் இல்லாத பதவியை இப்போது புதியதாக உருவாக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அதன் பின் சபாநாயகர் பதவிக்கு பாஜக முயற்சி செய்ய, அதற்கும் செக் வைத்தார் ரங்கசாமி. சுயேச்சை எம்.எல்.ஏ.ஒருவரை சபாநாயகர் ஆக்க ரங்கசாமி திட்டமிடுவதாக பாஜகவுக்குத் தகவல் கிடைக்க அதிர்ந்து போனது பாஜக.

கடந்த 3 ஆம் தேதி புதுச்சேரி வந்த ராஜீவ் சந்திரசேகர், 4ஆம் தேதி, முதல்வர் ரங்கசாமியைச் சந்திக்கச் சென்றபோது ஒரு மணி நேரம் காக்க வைத்துவிட்டதாக பாஜகவினர் கோபமாகக் கூறி வருகிறார்கள். சந்திப்பின்போது ராஜிவ், இலாகாக்கள் அடங்கிய ஒரு பட்டியலை ரங்கசாமியிடம் கொடுக்கும்போது, பேப்பரை கீழே தவறவிட்டதால், அதை எடுத்துக்கொடுத்துள்ளார் ராஜீவ்.

அந்த பட்டியலைப் பார்த்த ரங்கசாமி, “ நான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசிக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இதை அப்படியே டெல்லிக்கு தெரிவித்துள்ளார் ராஜீவ் சந்திரசேகர்.

“ஏற்கனவே நிர்மல் குமார் சொரானாவை அவமதித்தார் ரங்கசாமி. பின் ராஜீவ் சந்திரசேகரை அவமதித்துள்ளார். இந்தத் தகவல்கள் டெல்லியில் உள்ளவர்களுக்கு தெரிந்ததும் முதல்வர் ரங்கசாமி மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். கடந்த மாதம் 26ஆம் தேதி, தற்காலிக சபாநாயகராக லட்சுமிநாராயணை பொறுப்பேற்கவைத்து எம்.எல்.ஏ,கள் மற்றும் நியமன எம்.எல்.ஏ,கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்கள்.

தற்காலிக சபாநாயகர் பதவியேற்ற 15 நாட்களுக்குள் நிரந்தர சபாநாயகரைத் தேர்வுசெய்தாகவேண்டும் என்பது புதுச்சேரி சட்டமன்றம் விதி உள்ளது. இதை அடிப்படையாக வைத்து நீதிமன்றம் செல்லும் திட்டமும் பாஜகவிடம் உள்ளது. இதை அறிந்துகொண்டு ஜூன் 9 ஆம் தேதியிலிருந்து முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி பாஜகவினரைத் தொடர்புகொண்டுவருகிறார், ஆனால் பாஜக பிரமுகர்கள் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது டெல்லி தலைவர்களிடம் நீங்கள்தான் பேசவேண்டும் என சொல்லிவிட்டார்கள். இப்போது வரை ரங்கசாமிக்கும் பாஜக மேலிடத் தலைவர்களுக்கும் சமாதானம் ஆகவில்லை”என்கிறார்கள் பாஜகவினர்.

இந்த நிலையில், வரும் 14ஆம் தேதி, அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொள்வார்கள் என்று அறிவித்திருந்தாலும் அதற்கான வேலைகள் இதுவரையில் துவங்கவில்லை. என்.ஆர். காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி வைத்து வெற்றிபெற்று ஒன்றரை மாதம் ஆகிறது. ஆனபோதும் பரஸ்பரம் இரு கட்சிகளும் ஒன்றின் மீது ஒன்று நம்பிக்கை இல்லாத காரணத்தாலும், பதவி ஆசையாலும் புதுச்சேரி மக்கள் தங்களுக்கான அரசை தேர்ந்தெடுத்தும் அதை அமைக்க தாமதித்து வருகிறார்கள் பாஜகவும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியும்.

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

வெள்ளி 11 ஜுன் 2021