மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

பள்ளி பாடப்புத்தகம் விநியோகம்!

பள்ளி பாடப்புத்தகம் விநியோகம்!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான விலையில்லா பாடப் புத்தகங்களை அந்தந்த பள்ளிக்கு அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுதோறும் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே, மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படும். இந்தாண்டு கொரோனா காரணமாக தற்போதுதான் அதற்கான பணிகளை பள்ளிக் கல்வித் துறை முடுக்கிவிட்டுள்ளது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப்பணிகள் கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை, ஜூன் 3வது வாரத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டு, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்குநர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளுக்கான விலையில்லா பாடப் புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் கிடங்குகளில் இருந்து பெற்று, அந்தந்த பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்ப வேண்டும். ஜூன் 14 ஆம் தேதி முதல் மாணவர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று புத்தங்களை பெற்றுக் கொள்ளலாம்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது புத்தக கிடங்குகளிலிருந்து புத்தகங்களை பள்ளிக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் தனியார் பள்ளிகளில் 10 வகுப்பு உள்ளிட்ட வகுப்புகளுக்கு ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

-வினிதா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

வெள்ளி 11 ஜுன் 2021