மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

இரண்டாம் தவணையாக ரூ.2,000: இன்று முதல் டோக்கன்!

இரண்டாம் தவணையாக ரூ.2,000: இன்று முதல் டோக்கன்!

இன்று முதல் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணைக்கான டோக்கன் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜூன் 10) கோவை மாவட்டம், ராமநாதபுரத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளைப் பார்வையிட்டு, குடிமைப் பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுகிறதா என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, நியாய விலைக்கடை ஊழியர்களின் செயல்பாடுகள் குறித்து நுகர்வோரிடம் கேட்டறிந்த அவர், முதியோருக்கு முன்னுரிமை அடிப்படையில், பிரத்யேக வரிசை ஏற்படுத்தித் தரவும் உத்தரவிட்டார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்க ஜூன் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்படும்.

டோக்கன்களில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தின் அடிப்படையில் ஜூன் 15ஆம் தேதி முதல் இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் பொதுமக்களுக்குச் சரியானபடி நியாய விலைக்கடைகள் மூலம் பொருட்கள் சென்றடைகிறதா என ஆய்வு நடத்தி வருவதாகவும், உணவுத்துறையில் ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் தயவு தாட்சண்யமின்றி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

முதல் தவணையின்போது நிவாரணத் தொகை பெற முடியாதவர்கள் ஜூன் மாதத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வெள்ளி 11 ஜுன் 2021