மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

நீட் பாதிப்பு : ஒரு மாதத்தில் அறிக்கை கேட்கும் முதல்வர்!

நீட் பாதிப்பு : ஒரு மாதத்தில் அறிக்கை கேட்கும் முதல்வர்!

தமிழகத்தில் நீட் தேர்வு தாக்கம் குறித்து முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்து உத்தரவு பிறப்பித்தது.

சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அவற்றைச் சரிசெய்யும் வகையில், இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும் அவற்றிற்கான சட்ட வழிமுறைகளையும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று (ஜூன் 10) ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஜி.ஆர்.ரவீந்திரநாத் - உறுப்பினர், ஜவஹர் நேசன்- உறுப்பினர், அரசு முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை - உறுப்பினர், அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை - உறுப்பினர், அரசு செயலாளர்- சட்டத்துறை- உறுப்பினர், அரசு முதன்மைச் செயலாளர் / சிறப்புப் பணி அலுவலர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை - உறுப்பினர், இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் - உறுப்பினர், கூடுதல் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் / செயலர், தேர்வுக் குழு - உறுப்பினர்-செயலர் / ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கொண்ட குழு புள்ளி விவரங்களை ஆய்வு செய்து, தமிழ்நாட்டிலுள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனைப் பாதுகாத்திடத் தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

-பிரியா

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

வியாழன் 10 ஜுன் 2021