மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

கையெழுத்து இல்லாத தலைமை கழக அறிக்கை: அதிமுகவில் அடுத்த குழப்பம்!

கையெழுத்து இல்லாத தலைமை கழக அறிக்கை: அதிமுகவில் அடுத்த குழப்பம்!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் மே 14 ஆம் தேதி நடைபெறுமென்று இன்று (ஜூன் 10) அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். ஆனால் அந்த அறிக்கையை வைத்தே அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது.

அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவரை தேர்தெடுக்க மே 10 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் எடப்பாடி சட்டமன்ற அதிமுக தலைவராக தேர்நெதெடுக்கப்பட்டார். அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் சசிகலா அன்றாடம் தொண்டர்களுடன் பேசும் ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை உண்டுபண்ணி வருகிறார். அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் சசிகலா தொடர்ந்து பேசி வருகிறார். ஒபிஎஸ், சசிகலா ஆதரவு நிலை எடுத்துள்ளதாக வெளிப்படையாகப் பேசிவருகிறார்கள் அதிமுகவினர்.

இந்த சூழலில் சட்டமன்றத் தொடரும் ஆரம்பமாக இருப்பதால்... எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி மற்றும் கொறடா பதவிக்கு யார் யார் என்று தேர்வு செய்யமுடியாமல் தவித்து வருகிறார்கள் அதிமுக நிர்வாகிகள். கொங்கு மண்டலத்தில் அதிகமான எம்.எல்.ஏ,களை பெற்றிருந்தாலும் துணைத் தலைவர் பதவி மற்றும் கொறடா பதவியைக் கொங்கு சமூகத்துக்கு கொடுத்துவிட்டால், முக்குலத்தோர், வன்னியர், மற்றும் தலித்துகள் அதிருப்தியாகிவிடுவார்கள். அவர்களைச் சரிசெய்ய முக்கிய பதவிகளைக் கொடுத்தால் சசிகலா பக்கம் தாவிவிடுவார்களோ என்ற அச்சமும் எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாகச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

ஜூன் 21ஆம் தேதி, சட்டமன்றம் கூட்டத்தொடர் தொடங்க இருப்பதால், அதிமுக,வில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் கொறடா பதவிக்குத் தேர்வு செய்வதற்கு வரும் 14ஆம் தேதி, அதிமுக எம்.எல்.ஏ,கள் கூட்டத்தைக் கூட்ட அழைப்புவிட்டுள்ளனர். இந்த அறிவிப்பில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்துகள் இடம்பெறாமல் மொட்டையாக உள்ளதால், இந்த கூட்டத்தை யார் கூட்டுகிறார்கள் என்ற குழப்பத்தில் உள்ளனர் எம்.எல்.ஏ.க்கள்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் தன் தொகுதியான போடிக்கு சென்று நான்கு நாட்களாகிவிட்டது, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஜூன் 10ஆம் தேதி, காலையில் சேலம் புறப்பட்டுவிட்டார், இந்த நிலையில்தான் அதிமுக தலைமை கழக அறிக்கை வெளியாகியுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை எடப்பாடி கூட்டுகிறாரா அல்லது ஒபிஎஸ் கூட்டுகிறாரா என்ற குழப்பம் இருக்கும் நிலையில், “இந்த கூட்ட அறிவிப்பை வெளியிடச் செய்தது எடப்பாடி பழனிசாமிதான். கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் எந்தமுடிவும் எடுக்கமுடியாது. அதனால் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒபிஎஸ் கலந்துகொள்வாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்” ஒபிஎஸ் ஆதரவாளர்கள்.

அதிமுகவின் பரபரப்பு அத்தியாயம் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

-வணங்காமுடி

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வியாழன் 10 ஜுன் 2021