மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குநராக டிஐஜி லட்சுமி நியமனம்!

லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குநராக டிஐஜி லட்சுமி நியமனம்!

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை துணை இயக்குநராகக் காத்திருப்போர் பட்டியலிலிருந்த ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் லஞ்ச ஒழிப்புத் துறையில், டிஜிபி முதல் ஆய்வாளர்கள் வரை மாற்றப்பட்டு வருகின்றனர். கடந்த மே 10ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக கந்தசாமி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலிலிருந்த டிஐஜி எஸ்.லட்சுமி , லஞ்ச ஒழிப்புத்துறையில் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1997 பேட்ச் பிரிவைச் சேர்ந்த எஸ்.லட்சுமி. டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தவர், பின்னர் எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். சமீபத்தில் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராகப் பதவி வகித்தார்.

கடந்த மாதம் இவர் விருப்ப ஓய்வு கேட்டு டிஜிபி வாயிலாக அரசிடம் விண்ணப்பித்தார். சொந்த காரணங்களுக்காக அவர் விருப்ப ஓய்வு மனு தாக்கல் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன. இதுகுறித்து மின்னம்பலத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரி விருப்ப ஓய்வு கேட்பது ஏன்? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலிலிருந்த அவர், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

-பிரியா

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

வியாழன் 10 ஜுன் 2021