மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

சிவசங்கர் பாபா: அதிரவைக்கும் ஆறு மணி நேர வீடியோ!

சிவசங்கர் பாபா:  அதிரவைக்கும்  ஆறு மணி நேர வீடியோ!

தனது நிர்வாகத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவிகளை பாலியல் பரிபாலனம் செய்ததாக சாமியார் சிவசங்கர்பாபா மீது புகார்கள் வெடிக்க ஆரம்பித்திருக்கின்றன. சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் இதை மறுத்திருக்கிறது.

ஆனால் சிவசங்கர் பாபா எப்படிப்பட்டவர் என்பதற்கு சான்றாக நீண்ட வீடியோ ஒன்றை வைத்துக் கொண்டு நம்மை சந்தித்தார்கள் ஒரு காலத்தில் பாபாவுக்கு நெருக்கமாக இருந்த சிலர்.

“ இந்த வீடியோவில் இருக்கும் காட்சிகள் சில வருடத்துக்கு முன் எடுக்கப்பட்டவை. ஆனால் அதற்கு முன்னும், அதற்குப் பின்னும் சிவசங்கர் பாபா இன்னும் மாறவே இல்லை. பாபாவின் ஆசிரமத்தில் இருக்கும் சீடர்களுக்கும், அவரது பள்ளி மாணவர்களுக்கும் போதிக்கப்படும் முதல் பாடமே... ‘பாபாதான் உங்கள் பதி, பாபாதான் உங்கள் பாய்ஃப்ரண்ட், பாபாதான் உங்கள் நண்பர், பாபாதான் உங்கள் கடவுள்’என்பதுதான். அதுதான் அந்த வீடியோவிலும் அரங்கேறியிருக்கிறது.

சிவசங்கர் பாபாவைச் சுற்றி சுமார் முப்பது வயது மதிக்கத் தக்க இளம் தாய்மார்கள் அமர்ந்திருக்கிறார்கள். பாபாவின் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் தாய்கள்தான் அவர்கள். பெரும்பாலும் சிவசங்கர் பாபாவின் சீடர்கள் தங்கள் பிள்ளைகளை அவரது பள்ளியில் சேர்க்கிறார்கள். பொருளாதாரத்தில் நடுத்தரமான, பின் தங்கிய பெற்றோர்கள்தான் பாபாவின் இலக்கு.

ஏனெனில் இன்று எல்.கே.ஜி.க்கே. சாதாரணப் பள்ளிகளில் பத்தாயிரம் ரூபாய் முதல் பெரிய பள்ளிகளில் பல லட்சம் ருபாய்கள் வரை வசூலிக்கப்படுகிறது. ஆனால் பாபாவின் பள்ளியில் நோ டொனேஷன், நோ கல்விக் கட்டணம். ரம்யமான கட்டிடங்கள், பரந்த பள்ளி உட்கட்டமைப்பு, பள்ளி வளாகத்துக்குள்ளேயே ஹாஸ்டல்கள் என இருப்பதால் பெரும்பாலும் சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர்கள் தங்கள் பிள்ளைகளை பாபாவின் பள்ளியிலேயே படிக்க வைக்கிறார்கள். அதே வளாகத்துக்குள் அவர்களும் தங்கியிருக்கிறார்கள்.

இப்படியான இளம் தாய்மார்கள் சுமார் இருபது பேர் அந்த வீடியோவில் சிவசங்கர் பாபாவுடன் இருக்கிறார்கள். பாபா ஒரு கோப்பையில் மதுவை அருந்திக் கொண்டிருக்கிறார். சுற்றிலும் அந்த பெண்கள் தங்கள் கைகளிலும் கோப்பையோடு பாபாவோடு சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருகையில் மது, ஒரு கையில் மாது என்கிற கண்ணதாசனின் பாடலே தோற்றுவிடும் அளவுக்கு சிவசங்கர் பாபா அந்த வீடியோவில் பெண்கள் புடை சூழ இருக்கிறார். ஒரு கட்டத்தில் பாபாவின் கண்ணசைவுக்கு, கை அசைவுக்கு ஏற்ப அந்த பெண்கள் தங்கள் ஆடைகளைக் களைகிறார்கள். அவர்களை ஆங்காங்கே தட்டி, கிள்ளி தன் ‘ஆசீர்வாதத்தை’ வெளிப்படுத்துகிறார் பாபா. அவர்களின் கைகளைக் கோர்த்துக் கொண்டு டான்ஸ் ஆடுகிறார். அவர்களின் மேனியில் பாபாவின் கரங்கள் விளையாடுகின்றன. இடையிடையே மதுவும் அருந்துகிறார். கொஞ்சம் அதிகமாகி பாபா குமட்டி வாந்தியெடுக்கிறார் பாபா.

ஆனால் அந்த பெண்களிடம் எவ்வித அருவெறுப்போ, அசௌகரிய உணர்வோ இல்லை. பாபாவின் வாந்தியை துடைத்தல் புண்ணியம் என்பதைப் போல அதை துடைத்துவிட்டு, மீண்டும் தங்களை பாபாவிடம் ஒப்புக் கொடுக்கிறார்கள். பாபாவுடன் மது அருந்துகிறார்கள், பாபாவுடன் சாப்பிடுகிறார்கள், பின் பாபாவுக்கு தங்களையே உணவாகவும் படைக்கிறார்கள்.

அனேகமாக அந்த வீடியோ ஒரு மாலை நேரத்தில் ஆரம்பித்திருக்க வேண்டும். இரவு ஆக ஆக பெண்கள் தங்களின் ஆடைகளைக் களைந்து பாபாவோடு பின்னிப் பிணைந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணோடும் சில நிமிடங்கள், ஒரு பெண்ணை கட்டியணைக்குபோதே இன்னொரு பெண்ணை கட்டியிழுத்தல் என்று சுமார் ஆறு மணி நேரமாக சிவசங்கர் பாபாவின் அந்த ஆபாசம் தொடர்கிறது. இவ்வளவு காட்சிகளையும் பாபாவின் பக்கத்தில் இருக்கும் ஒருவர்தான் படம் எடுத்திருக்கிறார். அவர் எதற்காக எடுத்தார், அப்போதைய அவரது சூழல் என்ன என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் அந்த வீடியோவில் விரச வாத்தியாராக அவதாரம் எடுத்திருப்பது சாட்சாத் சிவசங்கர் பாபாதான். பல வருடங்களுக்கு முன்னே இப்படித்தான்....இப்போதும் அவர் இப்படித்தான்”என்கிறார்கள்.

-குமார்

அதிகரிக்கும் ஆதாரங்கள்; சிலுமிஷ சிவசங்கர் சிக்குவது எப்போது?

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வியாழன் 10 ஜுன் 2021