மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

ஆம்புலன்ஸ் விபத்து : கர்ப்பிணி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்!

ஆம்புலன்ஸ் விபத்து : கர்ப்பிணி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்!

கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான ஜெயலெட்சுமிக்கு இன்று(ஜூன் 10) அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, வரவழைக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸில் ஜெயலெட்சுமி மற்றும் அவரது மாமியார் மற்றும் அவரது நாத்தனார் என மூவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். ஆலத்தூர் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் திடீரென டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தின் மீது அதிவேகத்தில் மோதியதில் வயிற்றில் குழந்தையோடு இருந்த ஜெயலட்சுமி, மாமியார் செல்வி மற்றும் நாத்தனார் அம்பிகா ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பூமிக்கு வராத குழந்தையும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் மற்றும் உயிரிழந்த உறவினர்கள் செல்வி, அம்பிகா ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பந்தப்படவர்களுக்கு சேர வேண்டிய தொகையையும் விரைவில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

-வினிதா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

வியாழன் 10 ஜுன் 2021