மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

50% ஊழியர்களுடன் நீதிமன்றம் இயங்கும்!

50% ஊழியர்களுடன் நீதிமன்றம் இயங்கும்!

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜூன் 14ஆம் தேதி முதல் 50 சதவிகித ஊழியர்களுடன் மட்டுமே அனைத்துப் பிரிவுகளும் செயல்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு வாரம் கூடுதல் தளர்வுகள் அளித்து ஊரடங்கை நீட்டிக்கலாம் என மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக வழக்குகள் காணொலி மூலமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் நீதிபதிகள் மட்டும் நீதிமன்றங்களுக்கு வந்து வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, வழக்கறிஞர் அறைகள், சங்க அலுவலகங்கள், நூலகங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜூன் 14ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் 50 சதவிகித ஊழியர்களுடன் அனைத்து பிரிவுகளும் செயல்பட வேண்டும். நீதிமன்ற ஊழியர்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் இரண்டு நாட்கள் பணி என சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.

நீதிமன்றம் பிறப்பிக்கும் வழிகாட்டுதல் மட்டுமல்லாமல், கொரோனா தடுப்பு நடவடிக்கையாகத் தமிழக அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் விதிமுறைகளையும் நீதிமன்ற ஊழியர்கள் பின்பற்ற வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 29 வழக்கறிஞர்களும், மதுரை கிளைக்கு 15 அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா காரணமாக ஜூன் 1 முதல் 11 வரை 9 நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

வியாழன் 10 ஜுன் 2021