மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

வணிக உரிமங்கள் காலாவதியாகும் தேதி நீட்டிப்பு!

வணிக உரிமங்கள் காலாவதியாகும் தேதி நீட்டிப்பு!

தொழில், வணிக, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் மே மாதம் முதல் செப்டம்பர் வரை காலாவதியாக உள்ள அனைத்து உரிமங்களையும் டிசம்பர் 31ஆம் தேதிவரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ கொரோனா காரணமாக மே 2021 முதல் செப்டம்பர் 2021 வரை காலவதியாகவுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறை, தொழிலாளர் துறை, தொழிலாளர் பாதுகாப்பு துறை, வணிக உரிமம் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வமான உரிமங்களும் 2021 டிசம்பர் வரை நீட்டிக்கப்படுகிறது.

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளிடம் பெற்ற வணிக உரிமங்கள் டிசம்பர் 31 வரை செல்லும். உற்பத்தி, வணிகம், சேவை நிறுவனங்கள் டிசம்பர் 31 வரையிலான காலத்துக்குத் தடையின்மைச் சான்று, ஒப்புதல் பெறவும், உரிமம் புதுப்பிக்கவும் வேண்டியதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது.

கொரோனா காலத்தில் சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

ஸ்டாலினை சந்திப்பாரா அமித் ஷா?

4 நிமிட வாசிப்பு

ஸ்டாலினை சந்திப்பாரா அமித் ஷா?

நித்தி போல தப்ப முயற்சி: சிவசங்கர் பாபா கைது பின்னணி!

4 நிமிட வாசிப்பு

நித்தி போல தப்ப முயற்சி: சிவசங்கர் பாபா கைது பின்னணி!

மொட்டையடித்து தப்பிக்க நினைத்த சிவசங்கர் பாபா- பள்ளிக்கு அங்கீகாரம் ...

3 நிமிட வாசிப்பு

மொட்டையடித்து தப்பிக்க நினைத்த சிவசங்கர் பாபா- பள்ளிக்கு அங்கீகாரம் ரத்து?

வியாழன் 10 ஜுன் 2021