மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

ஆம்புலன்ஸ் விபத்தில் நான்கு பேர் பலி: விபத்துக்கான காரணம்?

ஆம்புலன்ஸ் விபத்தில் நான்கு பேர் பலி: விபத்துக்கான காரணம்?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் தாய், சேய் உட்பட நான்கு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதியதாக உதயமாகிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் அருகில் உள்ள புதுப்பட்டு கிராமத்தில் வசித்து வந்த கர்ப்பிணி ஜெயலட்சுமிக்கு (23) பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, 108 ஆம்புலன்ஸூக்கு போன் செய்து வரவழைக்கப்பட்டது. இன்று(ஜூன் 10) காலை கர்ப்பிணி ஜெயலட்சுமி, அவருக்கு உதவியாக மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா ஆகிய மூவரும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு சென்றனர். சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், ஆலந்துரை ஏரிக்கரை அருகே செல்லும்போது டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ஜெயலட்சுமி, அவர் வயிற்றில் இருந்த குழந்தை, செல்வி, அம்பிகா என நான்கு பேரும் உயிரிழந்தனர்.

ஓட்டுநர் கலியமூர்த்தி, செவிலியர் மீனா, மற்றும் ஆம்புலன்ஸ் உதவியாளர் தேன்மொழி ஆகிய மூவரும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்கான காரணங்களைப் பற்றி விசாரித்தபோது, “ கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஆம்புலனஸ் ஓட்டுநர்கள் ஓய்வு இல்லாமல் வேலை செய்து வருகின்றனர். அதேசமயம், ஊரடங்கு காரணமாக ஒர்க்‌ஷாப் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் வாகனத்தையும் சரியாக பராமரிக்க முடியவில்லை.

இன்று நடந்த சம்பவம் தேய்ந்துபோன டயர் வெடித்ததால் ஆம்புலன்ஸை கட்டுப்படுத்த முடியாமல் வேகமாக மரத்தில் மோதியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.

உயிரைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லக்கூடிய ஆம்புலன்ஸை அன்றாடம் பராமரித்து நல்ல கண்டிஷனில் வைத்திருக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

-வணங்காமுடி

ஸ்டாலினை சந்திப்பாரா அமித் ஷா?

4 நிமிட வாசிப்பு

ஸ்டாலினை சந்திப்பாரா அமித் ஷா?

நித்தி போல தப்ப முயற்சி: சிவசங்கர் பாபா கைது பின்னணி!

4 நிமிட வாசிப்பு

நித்தி போல தப்ப முயற்சி: சிவசங்கர் பாபா கைது பின்னணி!

மொட்டையடித்து தப்பிக்க நினைத்த சிவசங்கர் பாபா- பள்ளிக்கு அங்கீகாரம் ...

3 நிமிட வாசிப்பு

மொட்டையடித்து தப்பிக்க நினைத்த சிவசங்கர் பாபா- பள்ளிக்கு அங்கீகாரம் ரத்து?

வியாழன் 10 ஜுன் 2021