மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

பிளஸ் 1 நுழைவுத் தேர்வு ரத்து!

பிளஸ் 1 நுழைவுத் தேர்வு ரத்து!

பள்ளி அளவில் நடைபெறவிருந்த பிளஸ் 1 மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் எதிரொலியாகத் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்தது. அதுபோன்று 9 ,10, 11,12 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், பிளஸ் 1 சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தத் தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார்.

அதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக 10 முதல் 15 சதவிகிதம் மாணவர்களைச் சேர்க்கலாம். அப்படி ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட இடங்களைவிட அதிக மாணவர்கள் விண்ணப்பித்தால் சம்பந்தப்பட்ட பாடத்தில் 50 வினாக்கள் கொண்ட சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான நுழைவுத் தேர்வைச் சம்பந்தப்பட்ட பள்ளி அளவில் நடத்தி மாணவர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், பாமக மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மருத்துவம் பொறியியல் ஆகிய உயர்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் பிளஸ் 1 சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை நடத்துவதா என்று கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில் பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையின்போது மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் வரும் பாடப்பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில் தேர்வு எதுவும் நடத்த வேண்டாம். அதற்கு மாறாக மாணவர்களின் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த அறிவுரைகளின்படி பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை நடத்த அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

-பிரியா

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

வியாழன் 10 ஜுன் 2021