மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

ஊரடங்கில் அத்துமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!

ஊரடங்கில் அத்துமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!

ஊரடங்கைக் கடைபிடிக்காமல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவுடன் நேற்று (ஜூன் 9) நடந்த கூட்டத்தில், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் அரை மணி நேரம் வரை நீடித்தது.

செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஊரடங்கு சென்னையில் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய மண்டல ஊரடங்கு அமலாக்கக் குழு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மண்டலத்துக்கு ஒரு குழு வீதம் 15 குழுக்களாகச் செயல்பட்டு வந்தன. தற்போது மண்டலத்துக்கு மூன்று குழுக்கள் வீதம் 45 குழுக்களாக உயர்த்துவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் மூலம் விழிப்புணர்வு பணிகளையும் தொடங்க உள்ளோம்.

பொதுமக்கள், ஊரடங்குக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, மாநகராட்சி அலுவலர்களுக்கும் காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஊரடங்கைக் கடைப்பிடிக்காமல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு முதல் இரண்டு முறை எச்சரிக்கை விடப்படும். மூன்றாவது முறையும் விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் அபராதம், கடைக்கு சீல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “கடந்த மே மாதத்தில் முகக்கவசம் அணியாத 11,105 பேருக்கும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 2,548 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சந்தை, கடைகளில் பலர் முகக்கவசம் அணியாமல் இருக்கின்றனர். இந்தக் காலக்கட்டத்தில் மக்கள் தாமாக முன்வந்து கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். சலூன் கடை திறப்பு உள்ளிட்டவை தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்று பேசினார்.

-வினிதா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

வியாழன் 10 ஜுன் 2021