மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

இன்று 17,321 பேருக்கு கொரோனா!

இன்று 17,321 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று (ஜூன் 8) ஒரே நாளில் 17,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,92,025ஆக அதிகரித்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 9,522 பேர் ஆண்கள், 7,799 பேர் பெண்கள் ஆவர்.

தனியார் மருத்துவமனைகளில் 169 பேர், அரசு மருத்துவமனைகளில் 236 பேர் என இன்று மட்டும் 405 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்தபலி எண்ணிக்கை 28,170 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 31,253 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை 20,59,597 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று மட்டும் 1,80,750 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 2,04,258 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் 1345 பேரும்,செங்கல்பட்டில் 726 பேரும், கோவையில் 2319 பேரும், ஈரோட்டில் 1405 பேரும், சேலத்தில் 957 பேரும், திருப்பூரில் 913 பேரும், தஞ்சையில் 685 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டில் 29 பேரும், சென்னையில் 52 பேரும், கோவையில் 62 பேரும், கன்னியாகுமரில் 14 பேரும், சேலத்தில் 23 பேரும், திருவள்ளூரில் 12 பேரும், திருப்பூரில் 15 பேரும், திருச்சியில் 12 பேரும் கொரோனாவால் பலியாகினர்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

புதன் 9 ஜுன் 2021