மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

கட்டுமான பொருட்களின் விலை உயர்வு: அமைச்சர் விளக்கம்!

கட்டுமான பொருட்களின் விலை உயர்வு: அமைச்சர் விளக்கம்!

கட்டுமான பொருட்களின் விலை உயர்வு பற்றி முதல்வரிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் கோரமண்டல் மற்றும் அல்ட்ரா டெக் சிமெண்ட் ஒரு மூட்டை விலை ரூ.430லிருந்து 480 ஆகவும், செட்டிநாடு சிமெண்ட் ரூ.360லிருந்து 420 ஆகவும், பாரதி சிமெண்ட் ரூ.360லிருந்து 400 ஆகவும் அதிகரித்துள்ளது.

டாடா நிறுவன கட்டுமான கம்பிகள் ஒரு டன் ரூ.76 ஆயிரத்திலிருந்து 78 ஆயிரமாகவும், ஏ.ஆர்.எஸ். கம்பிகள் ரூ.66 ஆயிரத்திலிருந்து 68 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது. எம்- சாண்ட் ஒரு யூனிட் ரூ.6,000 ஆகவும் ஒரு அங்குல ஜல்லி ரூ.3,900 ஆகவும், முக்கால் அங்குல ஜல்லி ரூ.4,100 ஆகவும் அதிகரித்துள்ளது.

அதுபோன்று, செங்கல், ஜல்லி, எம்-சாண்ட், பெயிண்ட் உள்ளிட்டவைகளின் விலையும் அதிகரித்துள்ளது. அனைத்து கட்டுமான பொருட்களின் விலையும் 30-40 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாக கட்டிட பொறியாளர் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கட்டுமான பொருட்களின் திடீர் விலை உயர்வுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்டுமான பொருட்களின் விலை உயர்வை தடுக்க அரசு கவனம் செலுத்த வேண்டும். விலையேற்றத்திற்கான காரணங்களை ஆராய்ந்து, பொருட்களின் விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

”கட்டுமான பொருட்களின் விலை உயர்வு கட்டுமானத் தொழிலை நேரடியாகவும், அதன் மூலம் கட்டுமானத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை மறைமுகமாகவும் கடுமையாக பாதிக்கும்” என பாமக இளைஞரணி அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில், “ஊரடங்கு காரணமாகவே சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பதாக கூறப்படுவது தவறு. ஊரடங்கு காலத்தில் உற்பத்தி தடைபடவில்லை; தேவை குறைந்துள்ளது. அத்தகைய சூழலில் விலை குறையாமல் அதிகரிப்பது வினோதம்!

சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு அதிகபட்ச விலையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். மூட்டை ரூ.218 என்ற விலையிலான அரசு சிமெண்ட் (அம்மா சிமெண்ட்) விற்பனையை அதிகரித்து விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு தமிழக தொழில் மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” கட்டுமான பொருட்களின் விலை உயர்வு குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசித்து, விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும் அவர், ”மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் கொண்டு வருவதற்கான திட்டம் உள்ளது. சென்னையில் அதிக முதலீட்டில் தொழில் தொடங்க அளிக்கப்படும் அதே சலுகைகள், தென் மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

கடந்த இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஜூலை 15 ஆம் தேதிக்கு பிறகு புதிய தொழில் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்படும். நாளை முதல் அகழ்வாய்வுகள் நடைபெறும் கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய்யவுள்ளதாக” கூறினார்.

-வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 9 ஜுன் 2021