மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி எப்போது?

5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி எப்போது?

5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி குறித்த உத்தரவு விரைவில் வெளியாகும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

இன்று (ஜூன் 9) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க் கடன் வழங்குதல் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஐந்து பவுனுக்கு மிகாமல் உள்ள நகைக் கடனை தள்ளுபடி செய்வதாகத் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தோம். விரைவில் அதற்கான உத்தரவு வெளியாகும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்குக் கடன் தள்ளுபடி கொடுத்ததாகத் தமிழகம் முழுவதும் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அதுதொடர்பாக கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளுக்குத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகக் கடன்கள் வழங்க ரூ.11,500 கோடிக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு குறைபாடு இல்லாமல் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மழையால் சேதமடையும் விவசாய பொருட்கள் குறித்து தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடரால் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு உடனே உரிய நிவாரணம் வழங்கப்படும்.

கூட்டுறவுப் பணிகளில் சேர்வதற்காக, கடந்த ஆட்சியில் நேர்காணல் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு பணியாணை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

புதன் 9 ஜுன் 2021