மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

மாஜி அமைச்சருக்கு முன்ஜாமீன் கொடுக்க எதிர்ப்பு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

மாஜி அமைச்சருக்கு  முன்ஜாமீன் கொடுக்க எதிர்ப்பு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய வழக்கில் தீர்ப்பைச் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 5 ஆண்டுகள் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை சாந்தினி அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று நடிகை சாந்தினி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பணம் பறிப்பதற்காகப் புகார் கொடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கூறும் குற்றச்சாட்டுப் பொய் என்றும், திருமணம் செய்து கொள்வதாக அவர் கூறியதால் தான் சேர்ந்து வாழச் சம்மதித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கைக் கடந்த ஜூன் 3ஆம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், மணிகண்டனை ஜூன் 9ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இவ்வழக்கு மீண்டும் இன்று (ஜூன் 9) நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மணிகண்டன் தரப்பில்,"முன்னாள் அமைச்சரான மணிகண்டன் 12 ஆண்டுகள் அரசு மருத்துவராக பணியாற்றி பின் அரசியலுக்குள் நுழைந்துள்ளார். புகாரில் கூறியுள்ள குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை மணிகண்டன் திருமணமானவர் என தெரிந்து தான் அவருடன் நடிகை சாந்தினி குடும்பம் நடத்தியுள்ளார். சாந்தினியைக் காயப்படுத்தினார் என்பதற்கு எந்த மருத்துவ ஆதாரமுமில்லை. மணிகண்டன் நற்பெயருக்கு சாந்தினி களங்கம் ஏற்படுத்தி உள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார். இடைக்கால பாதுகாப்புக்காக முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில், நடிகை சாந்தினி மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், 2017ஆம் ஆண்டு பரணி என்பவர் மூலம் மணிகண்டனுக்கு நடிகை சாந்தினி அறிமுகமாகியுள்ளார். அவர் மலேசியாவின் தென் மாநில தூதராக இருந்தார். மலேசியாவில் முதலீடு தொடர்பாக மணிகண்டன் அவரை சந்தித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியுள்ளார். கட்டாயப்படுத்திக் கருக்கலைப்பு செய்துள்ளார். உதைத்ததால் சாந்தினி படுகாயமடைந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மணிகண்டனைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மணிகண்டன் முக்கிய பதவியை வகித்தவர் என்பதால் அவர் சாட்சிகளைக் கலைக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

சாந்தினி தரப்பில், திருமணம் செய்து கொள்வதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதால் தான் உறவுக்கு சாந்தினி ஒப்புதல் தெரிவித்துள்ளார். முதலில் சாந்தினி யாரெனத் தெரியாது என்று கூறிய மணிகண்டன் பிறகு சந்தித்ததை ஒப்புக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

புதன் 9 ஜுன் 2021