மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் : குழு அமைப்பு!

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் : குழு அமைப்பு!

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான திட்டங்களை செயல்படுத்த 7 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொரோனா தொற்றால், தங்களது பெற்றோர்களை இழந்துள்ளனர். தமிழகத்திலும் அதிகமான குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர்.

பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்யப்படும். குழந்தை 18 வயதை அடையும்போது, இந்த தொகை வட்டியுடன் வழங்கப்படும். இக்குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை வழங்கப்படும். பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும். கொரோனா நோய்த் தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் உடனடி நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என கடந்த மே 29ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை உள்பட பல திட்டங்களை செயல்படுத்த வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவின் தலைவராக நிதித் துறை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறைச் செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர், சமூக நலத்துறை ஆணையர், குழந்தைகள் நலனுக்காக பணியாற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 2 பேர் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் இக்குழு கூடி ஆலோசனை நடத்தியது. திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த தேவைப்படும்போது இந்தக்குழு கூடி ஆலோசனை மேற்கொள்ளும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

புதன் 9 ஜுன் 2021