மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

பத்திரப்பதிவு முறைகேடு : விரைவில் புகார் மையம்!

பத்திரப்பதிவு முறைகேடு : விரைவில் புகார் மையம்!

பத்திரப் பதிவு முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் விரைவில் புகார் மையம் அமைக்கப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் பேசியுள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கடைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் 30 சதவிகித ஊழியர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, 38 மாவட்டங்களிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் 50 சதவிகித டோக்கன் அனுமதியுடன் செயல்படத் தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 575 பத்திரப்பதிவு அலுவலகங்களில் 28,750 டோக்கன்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தன. நேற்று ஒரே நாளில் 4,600 பத்திரப்பதிவுகள் நடைபெற்றன.

மதுரை திருமலைநாயக்கர் மகால் அருகேயுள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பத்திரப்பதிவு முறை நடைபெறுகிறதா என்பது குறித்து வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு நடத்தினார். பின்பு, பத்திரப்பதிவு செய்யவந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,” தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பத்திரப்பதிவு செயல்படுகிறது. பத்திரப் பதிவு எளிமையான முறையிலும், இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் உரிய கட்டணம் பெற்று பத்திரப்பதிவு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரப்பதிவு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் புகார் மையம் விரைவில் அமைக்கப்படும். வணிக வரித்துறையில் அலுவலகமே இல்லாமல் தவறாகப் பதிவு செய்துகொண்டு செயல்படும் நிறுவனங்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 9 ஜுன் 2021