மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

முதல்வரிடம் புகாரளிக்க தனிப்பிரிவு இணையதளம்!

முதல்வரிடம் புகாரளிக்க தனிப்பிரிவு இணையதளம்!

தமிழக முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டிருக்கிறது.

கடந்த மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றார். ஆட்சிக்கு வந்து, ஒரு மாத காலத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அதன்படி, ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒரு துறையை உருவாக்கி, மக்கள் அளித்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க ஒரு துறையை உருவாக்கி, மக்கள் அளித்த புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. சிஎம்செல் என்ற இணையதளத்தில் மக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். அளிக்கப்பட்ட புகார் சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ளும் வசதியும் இணையதளத்தில் உள்ளது.

இந்த நடவடிக்கைக்கு மக்கள் வரவேற்பு அளித்தாலும், ஒருசில குறைபாடுகள் இருப்பதாக புகார் வந்துள்ளது. அந்த இணையதளத்தில் ’நோடல் அதிகாரிகள் விவரம்’ என்ற பிரிவில் 30 மாவட்டங்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, புது மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட சில மாவட்டங்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. தென்காசி, மயிலாடுதுறை, ராணிபேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் முன்னர் இருந்த மாவட்டங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்திலிருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ள நிலையில், தனி மாவட்டமாக உள்ள சேலமும் பட்டியலில் விடுபட்டுள்ளது.

-வினிதா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

புதன் 9 ஜுன் 2021