மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

மக்கள் வெளியே சுற்றுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்: நீதிமன்றம்!

மக்கள் வெளியே சுற்றுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்: நீதிமன்றம்!

ஊரடங்கின் போது மக்கள் வெளியே சுற்றித் திரிவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே அத்தியாவசிய தேவைகளுக்காக சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் சிவா என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் , தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவு வழங்கி பராமரிக்க நடவடிக்கை தேவை என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (ஜூன் 9) விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம், தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் வெளியில் பார்க்கும்போது ஊரடங்கு அமலில் இருக்கிறதா என்று கேட்கும் நிலையில் உள்ளது. ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்பட்டு வழக்கமான செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது போல் தெரிகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், 2020 ஆம் ஆண்டு முதல் அலையின் போது ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் மிகக் கடுமையாக நடந்து கொண்டனர். இதனால் காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பல பிரச்சினைகள் உருவானது. எனவே இந்த முறை காவல்துறை கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் இயல்பாக வெளியே வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள், ஊரடங்கு காலத்தில் மக்கள் அதிக அளவு வெளியே சுற்றித் திரிவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் குறைப்பதற்காகத் தான் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்றும் அதனை மக்கள் உணரும் வகையில் ஒலிபெருக்கியின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 9 ஜுன் 2021