மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரைக் காணவில்லை: ப.சிதம்பரம்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரைக் காணவில்லை: ப.சிதம்பரம்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

கொரோனா மூன்றாம் அலை ஏற்படலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கும் நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் பல இடங்களில் தட்டுப்பாடு காரணமாகத் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் தற்போது தடுப்பூசி இல்லை என்பது உண்மைதான் என நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ”தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி மருந்து இருப்பு இல்லை. தடுப்பூசி போடுவது ஜூன் 2 ஆம் தேதியிலிருந்து ஏறத்தாழ மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தடுப்பூசி தயாரிக்கும் மற்றும் கொள்முதல் கொள்கைகள் தான் இந்நிலைக்கு முழு முதல் காரணம். தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது என்று நாள்தோறும் மார்தட்டிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

புதன் 9 ஜுன் 2021