மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

25 மாவட்டங்களில் பாதிப்பு குறைகிறது: சுகாதாரச் செயலாளர்!

25 மாவட்டங்களில் பாதிப்பு குறைகிறது: சுகாதாரச் செயலாளர்!

ஊரடங்குக்குப் பிறகு 25 மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.

கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினரின் முதல் கூட்டம் நேற்று (ஜூன் 8) சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அரசு அலுவலர்கள் இல்லாத நான்கு மருத்துவர்களும், மருத்துவக்கல்வி இயக்குநர் உள்ளிட்ட ஒன்பது பேரும் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டு பரவலைக் கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த மாவட்டங்களில் மைக்ரோ பிளானை செயல்படுத்துவது, அடுத்து வரும் கொரோனா அலையைத் தடுப்பது, தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஊரடங்குக்குப் பிறகு 25 மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.ஒன்பது

மாவட்டங்களில் தொற்று பரவல் அதே நிலையில் உள்ளது. நான்கு மாவட்டங்களில் தீவிரமாக உள்ளது. தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் தடுப்பூசி கையிருப்பில் இல்லை. நாளை முதல் 13ஆம் தேதி வரை 6.5 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விவரங்களை மறைக்காமல் வெளியிட்டு வருகிறோம். கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குறித்து ஒரு மாதத்துக்குப் பிறகு தகவல் வந்தாலும், அதைச் சேர்த்து தினசரி கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணக்கில் காட்டப்படுகிறது. சில மருத்துவமனைகளில் உயிரிழப்பு எண்ணிக்கையை வழங்க தாமதம் ஏற்படுகிறது. மற்றபடி எந்தவித ஒளிவுமறைவும் இல்லை. இதுகுறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தமிழகத்தில் 1,101 பேர் கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கறுப்புப் பூஞ்சைக்கு வேறு சில மருந்துகளையும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. மருந்து இல்லை என்ற நிலை இல்லை” எனத் தெரிவித்தார்.

-வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 9 ஜுன் 2021