மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

12 முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

12 முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

கொரோனா இரண்டாம் அலையால் தொழில்கள் முடங்கியிருக்கும் நிலையில், குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு கடனாளிகள் தங்களின் கடனை திருப்பி செலுத்துவதற்கு அவகாசம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்றுஒன்றிய அரசை வலியுறுத்தக்கோரி 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திரா, பீகார், சத்தீஸ்கர், டெல்லி, ஜார்கண்ட், கேரளா, மராட்டியம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய 12 மாநில முதல்வர்களுக்கு நேற்று (ஜூன் 8) ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்,

"கடனாளர்களை, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு கடனாளர்களை, கொரோனா பெருந்தொற்றின் முதலாவது மற்றும் 2-வது அலைகளின்போது, வெவ்வேறு தன்மைகளில் நடத்தும் பிரச்சினை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் மீண்டும் ஒன்றிணைய வேண்டியது அவசியமாக உள்ளது.

2021 ஏப்ரல் முதல் ஜூன் வரையான மாதங்களில் உள்ளூர் சூழல் அடிப்படையில், அந்தந்த மாநில அரசுகளால் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், கொரோனா முதல் அலையின்போது கடனாளர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் போன்ற நிவாரணம் தற்போது அளிக்கப்படவில்லை.

எனவே, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளிவைத்து, கூடுதல் காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, ரூ.5 கோடி வரையில் நிலுவைகளைக் கொண்டுள்ள அனைத்து சிறு கடனாளர்களுக்கும், குறைந்த அளவு 2021-2022 ஆண்டின் முதல் 2 காலாண்டுகளுக்கு, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்ற கருத்தை மத்திய நிதியமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஆகிய இருவரின் கவனத்திற்கும் கடிதம் மூலம் நீங்கள் அனைவரும் கொண்டு செல்ல வேண்டும்.

இதுபோன்ற கோரிக்கைகளை நாம் எடுத்துச் செல்வதை நீங்கள் நிச்சயமாக சரியானது என்று உணர்வீர்கள் என்று நம்புகிறேன். இப்போதைய காலத்தில் நமது கூட்டு வலிமையை நாம் வலிமைப்படுத்த வேண்டும்" என்று சுட்டிக் காட்டியுள்ளார் ஸ்டாலின்.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 9 ஜுன் 2021