மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 ஜுன் 2021

மருத்துவர்கள் மீது தாக்குதல் : அமைச்சர் எச்சரிக்கை!

மருத்துவர்கள் மீது தாக்குதல் : அமைச்சர் எச்சரிக்கை!

தன்னலம் கருதாமல் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து மக்களின் உயிர்களைக் காத்திட தமிழக அரசும், மருத்துவமனைகளும், மருத்துவர்கள். செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களும் அல்லும் பகலும் அயராது தம் உயிரைத் துச்சம் என மதித்து அரும்பணியாற்றி வருகின்றனர். அரசுத்துறையிலும், தனியார் துறையிலும் இவ்வாறு அயராது பணியாற்றிவரும் அனைவருடனும் தமிழக அரசு தோளோடு தோள்நின்று அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

இவ்வாறு களப்பணியாற்றி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையையும், பணிபுரிந்து வருபவர்களை ஊக்கப்படுத்த ஊக்கத்தொகையையும் தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி வழங்கியுள்ளது. இந்த நிலையில் சில நோயாளிகள் உயிர் இழக்க நேரிடும்போது மருத்துவமனைகளில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களை அந்நோயாளிகளின் உறவினர்கள் தாக்கியுள்ள சம்பவங்கள் சில இடங்களில் நடந்துள்ளது.

மருத்துவமனைகளில் உயிரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், சில தருணங்களில் உயிர் இழப்பு ஏற்படுவது தவிர்க்க இயலாததாகிறது. இச்சூழலில் உணர்ச்சிவசப்பட்டு மருத்துவர்களிடமும், மருத்துவமனைப் பணியாளர்களிடமும் தரக்குறைவாக நடந்துகொள்வது அவர்கள் ஆற்றிவரும் சேவையை இழிவுபடுத்துவதாக அமையும். இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

இச்செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது காவல் துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கூறியவாறு மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் பெரும் சேவை செய்துவரும் நிலையில், ஒரு சில மருத்துவமனைகள் இப்பேரிடர் சூழலைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு நோயாளிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும், காப்பீட்டு திட்டப் பயனாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்காமல் அவர்களிடம் கட்டணம் கேட்பதாகவும் சில செய்திகள் வந்துள்ளன.

மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் பாதிக்காது அவர்களின் நற்பணி தொடர்ந்திட உறுதுணையாக இருக்கக்கூடிய அதேநேரத்தில், பொதுமக்களிடம் அதிகக் கட்டணம் கோரி இலாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகள்மீதும், மருத்துவர்கள்மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும் தமிழக அரசு தயங்காது, தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி (Tamil Nadu Clinical Establishment Act) இந்த மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக,இந்திய மருத்துவ சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,” நாட்டின் பல பகுதிகளில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மீது நடந்து வரும் தாக்குதல்கள் வேதனையை ஏற்படுத்துகின்றன. அசாமில் ஒரு இளம் மருத்துவரும், மற்றொரு மாநிலத்தில் பெண் மருத்துவர்களும், மூத்த மருத்துவர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.

பணியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தாக்குபவர்கள் மீது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகைசெய்யும் ஒரு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. அந்த மசோதாவை உடனடியாக அவசர சட்டமாக பிறப்பிக்க வேண்டும். மேலும், இத்தகையவர்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்கும்வகையில் காலவரையறை நிர்ணயிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளது.

"எங்களை தெய்வமா பாக்கவேணாம் மனுசனா பாருங்க" டாக்டர் பல்லவி குமுறல் பேட்டி!

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

செவ்வாய் 8 ஜுன் 2021