மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 ஜுன் 2021

மதுக்கடை திறப்பு : சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்த இளைஞர்கள்!

மதுக்கடை திறப்பு : சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்த இளைஞர்கள்!

புதுச்சேரியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதை இளைஞர்கள், சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து கொண்டாடியுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மதுபான கடைகளும் மூடப்பட்டன. எங்கும் மதுபானம் கிடைக்காததால், கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்தது. இதற்கிடையில் வீட்டிலேயே சாராயத்தை தயாரிக்கவும் பலர் முயற்சி செய்தனர். இதனால், கள்ளச்சாராயம் குடித்த பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் செய்திகள் வந்தது.

இந்நிலையில், புதுச்சேரியில் அமலில் இருந்த ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் அனைத்து மதுபான கடைகளை காலை 9 மணி முதல் 5 மணிவரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 42 நாட்களுக்கு பிறகு புதுச்சேரி, காரைக்காலில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. மதுபான கடைகள் முன்பாக தடுப்புகள் கட்டப்பட்டு, சமூக இடைவெளியை கடைபிடித்து வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கி செல்கின்றனர். புதுச்சேரி மக்கள் மட்டுமன்றி காரைக்கால் , புதுச்சேரி எல்லை பகுதியிலுள்ள மக்களும் மதுபான கடைகளில் குவிந்துள்ளனர்.

மதுபான கடையில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்து வாங்குகின்றனரா? என்பதை கலால் துறை ஆணையர் சுதாகர் ஆய்வு மேற்கொண்டார்.

மதுபான கடை திறப்பை கொண்டாடும் விதமாக காரைக்கால் இளைஞர்கள் கடைக்கு முன்பாக சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து கொண்டாடினர்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 8 ஜுன் 2021