மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 ஜுன் 2021

இலவச தடுப்பூசி அறிவிப்பு : முதல்வர் வரவேற்பு!

இலவச தடுப்பூசி அறிவிப்பு : முதல்வர் வரவேற்பு!

மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

நேற்று(ஜூன் 7) மாலை 5 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, மாநிலங்களுக்கு ஜூன் 21 ஆம் தேதியிலிருந்து இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும். இந்தியாவில் உற்பத்தியாகும் 75% தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து நேரடியாக மாநிலங்களுக்கு வழங்கும். மீதமுள்ள 25% தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்யலாம் என பிரதமர் மோடி பேசினார்.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு மாநில முதல்வர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில்,” “மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75% மத்திய அரசு கொள்முதல் செய்து அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து, தடுப்பூசி கொள்கையில் முந்தைய நிலைபாட்டை மாற்றிக்கொண்டதற்காக பிரதமரை பாராட்டுகிறேன். அதுபோன்று தடுப்பூசி முன்பதிவு, தடுப்பூசி செலுத்துவது, நிர்வாகம் மற்றும் நடைமுறைகள் போன்றவற்றை ஒவ்வொரு மாநிலங்களின் கட்டுப்பாட்டில் விட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டரில், “ ஜூன் 21 ஆம் தேதியில் இருந்து இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருப்பது, இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமானது. எங்களுடைய வேண்டுகோளுக்கு பிரதமரிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன்”என்று தெரிவித்துள்ளார் .

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது ட்விட்டரில்,”18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இலவச தடுப்பூசி, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நீட்டிப்பு ஆகியவற்றை அறிவித்த பிரதமருக்கு நன்றி. இது கொரோனாவை எதிர்க்கும் போரில் உதவிகரமாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

வினிதா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

செவ்வாய் 8 ஜுன் 2021