மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

குறையும் கொரோனா உயிரிழப்பு!

குறையும் கொரோனா உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று (ஜூன் 7) ஒரே நாளில் 19,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,56,681 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 10,765 பேர் ஆண்கள், 8,683 பேர் பெண்கள் ஆவர்.

தனியார் மருத்துவமனைகளில் 103 பேர், அரசு மருத்துவமனைகளில் 248 பேர் என இன்று மட்டும் 351 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்தபலி எண்ணிக்கை 27,356 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 31,360 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை 19,97,299 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று மட்டும் 1,70,838 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 2,32,026 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் 1530 பேரும்,செங்கல்பட்டில் 837 பேரும், கோவையில் 2564 பேரும், ஈரோட்டில் 1646 பேரும், சேலத்தில் 907 பேரும், திருப்பூரில் 1027 பேரும், தஞ்சையில் 831 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டில் 22 பேரும், சென்னையில் 40 பேரும், கோவையில் 26 பேரும், திருவண்ணாமலையில் 30 பேரும், கன்னியாகுமரில் 21 பேரும், ஈரோட்டில் 19 பேரும் சேலத்தில் 12 பேரும், நாகையில் 11 பேரும், திருவள்ளூரில் 15 பேரும், திருப்பூரில் 11 பேரும், திருச்சியில் 14 பேரும் கொரோனாவால் பலியாகினர்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 7 ஜுன் 2021