மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

தீபாவளி வரை ஊரடங்கு? பிரதமர் ரேஷன் சூசகம்!

தீபாவளி வரை ஊரடங்கு?   பிரதமர் ரேஷன் சூசகம்!

இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது கொரோனா ஊரடங்கு அந்தந்த மாநில அரசுகளால் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், 24 முதல் முழு ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. இப்போது ஜூன் 6 முதல் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று (ஜூன் 7) நாட்டுக்கு ஆற்றிய உரையில், “ தீபாவளி வரை ரேஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். நவம்பர் மாதம் வரை 80 கோடி பேருக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் கிடைக்கும். ரேஷனில் உணவு தானியங்கள் வழங்குவதால் 80 கோடி பேர் பயனடைவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தமிழக அரசு ஊரடங்கு நிவாரணமாக மே மாதம் குடும்ப அட்டை தாரர்களுக்கு 2ஆயிரம் ரூபாயும், ஜூன் மாதம் 2 ஆயிரம் ரூபாயும் அறிவித்து வழங்கி வருகிறது. அதுபோல இப்போது 14 பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் இன்று ஆற்றிய உரையில் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் தீபாவளி வரை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இந்த வருடம் தீபாவளி நவம்பர் 4 ஆம் தேதி வருகிறது. ஆக நவம்பர் மாதம் வரை இந்தியா முழுதும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதை இதன் மூலம் சூசகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார் பிரதமர் மோடி என்ற விவாதங்கள் மக்களிடையே நடந்து வருகிறது.

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

திங்கள் 7 ஜுன் 2021