மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

ஜூன் 21 முதல் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம்: பிரதமர் மோடி

ஜூன் 21 முதல் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம்: பிரதமர் மோடி

வரும் ஜூன் 21-ஆம் தேதி முதல் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்றும் தடுப்பூசியை ஒன்றிய அரசு மொத்தமாகக் கொள்முதல் செய்யும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இன்று ஜூன் 7 மாலை 5 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர்....." நாட்டில் நிலவும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை விரைவில் கட்டுப்படுத்தப்படும். தடுப்பூசி முகாம் களை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொடிய தொற்று நோய் உலகத்தையே பாதித்து வருகிறது. இந்த நிலையில் நாம் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறோம்.

கொரோனாவை தடுக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும்தான். இந்தியாவில் தயாரித்த தடுப்பூசிகள் பல லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது. இந்தியாவின் கோவாக்சின் ஒரு உயிர் காக்கும் மருந்தாக அமைந்துள்ளது; உள்நாட்டில் தடுப்பூசி தயாரிக்காவிட்டால் நாம் என்ன செய்திருக்க முடியும்?

ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படாத வகையில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறோம்” என்று கூறிய பிரதமர் மோடி தற்போதைய தடுப்பூசி பற்றாக்குறை பற்றி பேசினார்.

“ நாட்டில் தற்போது நிலவும் தடுப்பூசி பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும். தேவையோடு ஒப்பிடும்போது தடுப்பூசி உற்பத்தி குறைவாகவே இருக்கிறது. ஆனாலும் தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்து அனைவருக்கும் தடுப்பூசியை நாம் கொண்டு செல்வோம்.

தடுப்பூசியை நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என்று சில மாநில அரசுகள் கூறினார்கள். ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்கையில் சில மாநிலங்களுக்கு மாற்று கருத்து இருந்தன. தடுப்பூசி பற்றாக்குறையை போக்க தங்களுக்கும் தடுப்பூசி வாங்கும் உரிமை வேண்டும் என மாநிலங்கள் கோரின. இதனையடுத்து அவர்களுக்கும் உரிமை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அதில் உள்ள சிக்கல்களை மாநில அரசுகள் உணர்ந்து விட்டன. தற்போது ஒன்றிய அரசே இதனை செய்யட்டும் என்று அந்த மாநில அரசுகள் கூறுகின்றன. இதனால் ஒன்றிய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை தொடரும்.

இப்போது மேலும் 3 புதிய கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன. மூக்கின் வழியாக சொட்டு மருந்துபோல் செலுத்தக்கூடிய தடுப்பு மருந்தும் பரிசோதனை நிலையில் இருக்கிறது.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒன்றிய அரசு இலவச தடுப்பூசிகளை வழங்கும். ஜூன் 21 முதல் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்கும்.கொரோனா தடுப்பூசி விநியோகத்தை ஒன்றிய அரசே முழுமையாக நடத்தும். 75 சதவீத தடுப்பூசி இலவசமாகவும், 25 சதவீதம் தனியார் மருத்துவமனைகளாலும் வழங்கப்படும்”என்று பிரதமர் அறிவித்தார்.

வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 7 ஜுன் 2021