மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

இது ட்ரெயிலர்தான், இனி மெயின் பிக்சரை பார்ப்பீர்கள் : அமைச்சர்!

இது ட்ரெயிலர்தான், இனி மெயின் பிக்சரை பார்ப்பீர்கள் : அமைச்சர்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 30 நாள் ஆட்சியானது வெறும் ட்ரெயிலர்தான், மெயின் பிக்சரை இனிமேல் பார்ப்பீர்கள்; தமிழக அரசியல் கட்சிகளும் பார்க்கும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்டெடுக்கும் பணி இன்று(ஜூன் 7) சாலிகிராமத்தில் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , “முதல்வரின் உத்தரவுப்படி சிதிலமடைந்திருக்கும் அனைத்து கோயில்களையும் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான கலைஞர் நகரில் உள்ள 5.5 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, வாகனம் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அந்த இடம் மீட்கப்பட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை எடுக்க 48 மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பதை இந்து சமய அறநிலையத்துறை ஒருபோதும் அனுமதிக்காது. யார் தவறு செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்” என்று கூறினார்.

மேலும் அவர், ”முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் 30 நாட்கள் முடிவடைந்துள்ளது. இது வெறும் ட்ரெயிலர்தான்; மெயின் பிக்சரைப் போகப் போக நீங்களும் தமிழக அரசியல் கட்சிகளும் பார்க்கும். 100 நாட்களுக்குள் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பை விரைவில் முதலமைச்சர் வெளியிடுவார்.

பாஜக தன்னை நிலைநிறுத்தி கொள்வதற்காகவும், தாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகவும் பல கேள்விகளை கேட்கலாம்; பிரச்சினைகளை எழுப்பலாம். அவர்களின் கருத்துகள் நல்ல ஆக்கபூர்வமாக இருந்தால், அதை ஏற்றுக் கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. முரண்பாடாக இருந்தால், அந்த விமர்சனங்களையும், கேள்விகளையும் பதிலளிக்காமல் புறந்தள்ளிவிட்டு எங்களுடைய பயணத்தை தொடருவோம் என்ற நிலையில் இருக்கிறோம்” என கூறினார்.

-வினிதா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

திங்கள் 7 ஜுன் 2021