மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

புதுச்சேரியிலும் பிளஸ் 2 தேர்வு ரத்து!

புதுச்சேரியிலும் பிளஸ் 2 தேர்வு ரத்து!

தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தை பின்பற்றி வரும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வந்தாலும், கொரோனா பாதிப்பிலும், உயிரிழப்பிலும் உலகளவில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. இந்தியா இன்னும் முழுமையாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாததால், மாணவர்களின் நலன் கருதி இந்தாண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 1ஆம் தேதியன்று அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான்,உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் தங்கள் மாநிலங்களில் நடைபெறும் பிளஸ் 2 தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தன.

தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து பல்வேறு தரப்பினர்களிடம் பல கட்ட ஆலோசனைகளை நடத்தி, இறுதியில் மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என முடிவெடுத்து பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஜூன் 5ஆம் தேதி இரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ்நாட்டைத் தொடர்ந்து, தற்போது புதுச்சேரியிலும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்துக்கென்று தனி கல்வி வாரியம் இல்லாததால், புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட மாணவர்கள் தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தையும், மாஹே மாணவர்கள் கேரளக் கல்வி வாரியத்தையும், ஏனாம் மாணவர்கள் ஆந்திரக் கல்வி வாரியத்தையும் பின்பற்றி வருகின்றனர்.

இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி, காரைக்காலில் 14,674 மாணவர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தை பின்பற்றி படித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதன்அடிப்படையில் தமிழ்நாடு பாடத்திட்டத்தைப் பின்பற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கான பிளஸ் 2 தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்திலும் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

திங்கள் 7 ஜுன் 2021