மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

நேரலையில் நீதிமன்றம்: நீங்களும் யோசனை சொல்லலாம்!

நேரலையில் நீதிமன்றம்: நீங்களும் யோசனை சொல்லலாம்!

நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைகளை நேரலையில் ஒளிபரப்புவது குறித்து மக்களிடம் கருத்துகள் கேட்கும் அறிவிப்பை உச்ச நீதிமன்றம் இன்று (ஜூன் 7) வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்புவது மற்றும் பதிவு செய்வது தொடர்பான வரைவு மாதிரி விதிகளை உச்சநீதிமன்றத்தின் மின்னணு குழு வெளியிட்டு, அதுதொடர்பாகபின்னூட்டம் மற்றும் கருத்துக்களைக் கோரியுள்ளது. https://ecommitteesci.gov.in/document/draft-model-rules-for-live-streaming-and-recording-of-court-proceedings/ என்ற இணையதளத்தில் இந்த வரைவு மாதிரி விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தின் கீழ் இந்திய நீதித் துறையில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பை அமல்படுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தின் மின்னணு குழு, இந்திய அரசின் நீதித் துறையுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் நீதிமன்ற வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு, அல்லது பதிவு செய்வது தொடர்பான வரைவு மாதிரி விதிகள் மீதான பின்னூட்டங்கள் மற்றும் கருத்துக்களை 30.6.2021 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்புவது மற்றும் பதிவு செய்வது தொடர்பான வரைவு மாதிரி விதிகள் பற்றி தங்களது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி டாக்டர் தனஞ்சயா ஒய் சந்திரசூட் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். அனைவருக்கும் அடிப்படை உரிமைகளை வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 இல் நீதிமன்ற நிகழ்வுகளின் நேரலை ஒளிபரப்பும் அடங்கும் என்று அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

”வெளிப்படைத்தன்மை, உள்ளடக்கம், நீதிக்கான அணுகல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நீதிமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பும் திட்டத்திற்கு மின்னணு குழு முன்னுரிமை அளித்துள்ளது. புயல், வெள்ளம், போக்குவரத்துத் தடை, போன்ற பிரச்சினைகளால் குடிமக்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் சட்ட மாணவர்களால் நீதிமன்ற நிகழ்வுகளை அணுக முடியாத சூழலில், இந்த நடவடிக்கை அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்”என்று சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் இன்று (ஜூன் 7) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

திங்கள் 7 ஜுன் 2021