மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

முதல்வரை தொந்தரவு செய்யக் கூடாது: மனுதாரருக்கு அபராதம்!

முதல்வரை தொந்தரவு செய்யக் கூடாது: மனுதாரருக்கு அபராதம்!

முதல்வர் மு.க.ஸ்டாலினை அசாதாரண சூழ்நிலைகளை தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாரிகள் தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனுதாரருக்கு அபராதத்துடன், ஒருவருடம் வழக்கு தொடரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் விவேகானந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்தார். அதில், ’கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் உச்சத்தில் இருந்தாலும், பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சளைக்காமல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தொடர்ச்சியாக ஆய்வுக்கூட்டங்களை நடத்துவது, சுற்றுப்பயணம் செல்வது என தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

தன்னுடைய உடல் நலனையும் கவனத்தில் கொள்ளாமல், கடந்த மே 30ஆம் தேதி கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் முழுக்கவச உடையணிந்து கொரோனா வார்டிற்குள் சென்றார். இப்படி ஓய்வில்லாமல் பணியாற்றிய குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை சுட்டிகாட்டி, தமிழக மக்களின் நலனில் அவருக்கு அக்கறை உள்ளதுபோல, முதல்வர் நலனிலும் மக்கள் அனைவருக்கும் அக்கறை இருக்கிறது. எனவே முதல்வரை அசாதாரண சூழ்நிலைகளை தவிர ஞாயிற்றுக் கிழமைகளில் தொந்தரவு செய்யக்கூடாது என தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை இன்று(ஜூன் 7) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரித்தது. அப்போது, அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என உத்தரவிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து இந்த மாதிரி வழக்கு தொடர்ந்ததற்கு மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த அபராதத் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும், மனுதாரர் நீதிமன்ற அனுமதி பெறாமல் ஓராண்டிற்கு பொதுநல வழக்கு தொடர தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அபிமன்யு

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

திங்கள் 7 ஜுன் 2021