மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

தளர்வுகள் அல்ல குழப்பங்கள்: திமுக அரசு மீது அதிமுகவின் குத்தீட்டி!

தளர்வுகள் அல்ல குழப்பங்கள்: திமுக அரசு மீது அதிமுகவின் குத்தீட்டி!

கொரோனா இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜூன் 1 முதல் இரண்டாம் முறையாக பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று (ஜூன் 7) காலை 6 மணி முதல் முடிவடைந்துள்ளது. இதையடுத்து இன்று முதல் கொரோனா தாக்கம் அதிகமுள்ள 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

எனவே இன்று முதல் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுதும் பல இடங்களில் மக்கள் கூட்டம் சாலையில் அதிகமாகவே தென் படுகிறது. ஊரடங்கை நீட்டிப்பதிலும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை தளர்வுபடுத்துவதிலும் திமுக அரசு பல்வேறு குழப்பங்களில் சிக்கியிருப்பதாக அதிமுக கண்டித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான நமது அம்மாவில் ‘விக்கித்து நிக்க விழிபிதுங்கி தவிக்க’என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்கிற திமுக ஆட்சியின் தொடர் அறிவிப்பு நாட்டு மக்களையே நகைக்க வைக்கிறது. கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் இறைச்சி மற்றும் மீன் கடைகளின் மொத்த விற்பனைக் கூடங்கள் இயங்கலாம். ஆனால் ஏழை எளிய மக்கள் வாங்கக்கூடிய இறைச்சி மீன் கடைகள் அனுமதி கிடையாதாம்

டூவீலர் மெக்கானிக் கடைகளை திறக்கலாம். ஆனால் வாகனங்களை ஓட்டத் தடை. இப்படியாக தளர்வுகள் என்ற பெயரில் குழப்பங்களையும், கிறுக்குத் தனமான முடிவுகளையும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அண்டை மாநிலங்கள் எல்லாம் ஊரடங்கு காலத்தில் மின் கட்டணத்தை ரத்து செய்யும் நிலையில், இவர்கள் மின்சாரத்தையே ரத்து செய்துவிடுகிறார்கள்.

வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டு ஊரடங்குகளை மட்டுமே உற்பத்தி செய்துகொண்டிருக்கிறார்கள். ஊரடங்கை முதலமைச்சருக்கு முன்பாகவே விக்கிரம ராஜா அறிவிக்கிறார். யாருக்கு என்ன துறை என்று தெரியாத அளவில் அமைச்சர்கள் எல்லாம் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார்கள். இன்னும் என்னென்ன கொடுமைகள் எல்லாம் வரிசை கட்டி காத்திருக்கின்றனவோ” என்று குத்தீட்டி என்ற பெயரில் திமுக அரசு மீது விமர்சனங்களைப் பாய்ச்சியிருக்கிறது அதிமுக.

வேந்தன்

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

திங்கள் 7 ஜுன் 2021