மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

மாணவிகளை சீரழித்த சிவசங்கர் பாபா- ராஜகோபாலன் போல கைதாவாரா?

மாணவிகளை சீரழித்த சிவசங்கர் பாபா- ராஜகோபாலன் போல கைதாவாரா?

பத்மசேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளிடம் முறை தவறி நடப்பதாக புகார் கிளம்பியதும், அவர் மீது மேலும் பல மாணவிகளும் புகார் செய்ய, அது பெரும் சர்ச்சையாகி ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார்.

மேலும் இதன் அடிப்படையில் வேறு பல பள்ளிகளின் பழைய மாணவிகளும் தங்களூக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை புகார்களாக காவல்துறைக்கு அனுப்பி வருகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவிகளும் புகார்கள் அனுப்பியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஏற்கனவே சலசலப்புகளுக்கு ஆளான ஆன்மிக பிரபலம் சிவசங்கர் பாபாவின் பள்ளியும் பாலியல் சர்ச்சைக்குள் வந்திருக்கிறது. ஏற்கனவே யாகவா முனிவருக்கும் சிவசங்கர் பாபாவுக்கும் இடையிலான உரையாடல்கள் தமிழ்நாட்டில் பிரபலமானவை. பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான சிவசங்கர் பாபாவால் நடத்தப்படும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் என்ற பள்ளியின் மாணவிகள் சிவசங்கர்பாபா மீதே புகார் கொடுத்திருப்பதாக சமூக செயற்பாட்டாளர் கீதா நாராயணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அவர் ஜூன் 6 ஆம் தேதி தனது பதவில், “ இன்னும் பல பள்ளிகள்,கல்லூரிகளிலிருந்து மாணவிகள் புகார் அளித்திருக்கிறார்கள்.ஆனால் ஒன்றை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். சுஷில் ஹரி இண்டர்னேஷனல் பள்ளி மாணவிகள் எழுதிய வாக்குமூலங்களைப் படித்த போது மனம் ரொம்ப வலித்தது. இப்பள்ளி சிவசங்கர் பாபாவால் நடத்தப் படுகிறது.பேசி இருக்கும் குழந்தைகளுக்கு நடந்திருப்பது துன்புறுத்தல் மட்டுமல்ல. வன்புணர்வு. அதுவும் தன்னைக் கடவுளாகவும்,இந்த உறவின் மூலம் அவர்களுடைய கர்ம வினை கழியும் என்றும்,இது கடவுளுக்குச் செய்யும் பணியாகவும் சொல்லித்தான் செய்திருக்கிறான்.

நித்யானந்தாவைப் போல் இந்த ஆளும் தப்பி விடக் கூடாது.இதில் அரசு தெளிவாக இருக்க வேண்டும்.பேச முன் வந்திருப்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்.பட வேண்டும்.அவர்கள் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும்.இப்போது பேசிக் கொண்டிருக்கிற பழைய தற்போதைய மாணவிகளின் தீரம் அசாதரணமானது. அவர்கள் அனைவர்க்கும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்”என்று கூறியுள்ள கீதா நாராயணன், மேலும்,

“இப்பிரச்சினை தமிழ் நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணையில் இருக்கிறது.காவல் துறைக்கு புகார் அளிக்கப்.பட்டிருக்கிறது. பள்ளிக் கல்வி அமைச்சர், சமூக நலத் துறை, பெண்கள் உரிமை அமைச்சர் இதில் தலையிட்டு விசாரணையைத் துரிதப் படுத்த வேண்டும்”என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இதனால் சிவசங்கர் பாபாவின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

-வேந்தன்

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ...

6 நிமிட வாசிப்பு

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்!

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

5 நிமிட வாசிப்பு

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

திங்கள் 7 ஜுன் 2021