மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

அமலுக்கு வந்தது தளர்வுகளுடன் ஊரடங்கு!

அமலுக்கு வந்தது தளர்வுகளுடன் ஊரடங்கு!

தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பின் காரணமாக, மே 31, ஜூன் 7 என இருமுறை, 14 நாட்கள் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கை மீறியவர்கள் மீது அபராதம், வழக்கு பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

இந்த நிலையில், ஜூன் 7ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி இன்று காலை 6 மணி முதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. மளிகை, பல சரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் 6 மணி முதல் 5 மணி வரை செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டதால் கடை உரிமையாளர்கள் காலை முதலே கடைகளைத் திறந்து வியாபாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

கோயம்பேடு உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் உள்ள காய்கறி, பழங்கள், பூ மொத்த விற்பனை சந்தைகள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. மொத்த விற்பனை சந்தைகளில் உள்ள சில்லறை விற்பனை கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு. பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், மின் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

விமானம், ரயில் மூலம் வரும் பயணிகளைக் கண்காணிப்பதற்காக https://eregister.tnega.org மூலம் இ-பதிவு செய்து பயணிக்கும் முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு மளிகை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளைத் திறக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

எனவே, இன்று கூடுதல் தளர்வு அமலுக்கு வந்த நிலையில், காலை முதலே வழக்கம் போலச் சாலைகளில் வாகனங்கள் செல்வதைக் காண முடிகிறது.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

திங்கள் 7 ஜுன் 2021