மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுக்கவில்லை: பாஜக

முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுக்கவில்லை: பாஜக

புதுச்சேரியில் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் அமைச்சரவை பொறுப்பேற்காததால் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் தடைபட்டுள்ளன.

சபாநாயகர் பதவி மற்றும் 2 அமைச்சர்கள் பதவி அளிக்க ஒப்புக்கொண்டதால் பாஜகவுக்கும், முதல்வர் ரங்கசாமிக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதனால் விரைவில் அமைச்சரவை பொறுப்பேற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவுக்குள்ளேயே சபாநாயகர் பதவி தொடர்பாகப் பிரச்சினை ஏற்பட்டது.

இந்த சூழலில் இரண்டாவது முறையாக நேற்று பாஜக சார்பில் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ”எங்களுக்கு சபாநாயகர் வேண்டாம். துணை முதல்வர் உட்பட இரு அமைச்சர்கள் வேண்டும். இதுதான் இறுதியானது. முடிவெடுத்துவிட்டு உடனே சொல்லுங்கள்” என்று ரங்கசாமியிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இதனால் மீண்டும் இரு கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு அமைச்சரவை பொறுப்பேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மின்னம்பலத்தில், ரங்கசாமி செக் : மீண்டும் துணை முதல்வர் கேட்கும் பாஜக! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் இன்று (ஜூன் 6) புதுச்சேரி சட்டப்பேரவை பாஜக தலைவர் நமச்சிவாயம், பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

நமச்சிவாயம் பேசுகையில், “முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமையிலிருந்ததால் ஒரு சில காலதாமதங்கள் ஏற்பட்டது. அவர் குணமாகி வந்ததும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது” என்றார்.

அப்போது பேசிய சாமிநாதன், “பாஜக நெருக்கடி கொடுக்கிறது என்று செய்திகள் வருகிறது.

‘சிறந்த மாநிலம் புதுச்சேரி’ என்ற நிலையை ஏற்படுத்த நாங்கள் தேஜ கூட்டணியில் இடம்பெற்றோம். நாங்கள் எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. எங்களுக்குள் சுமுகமான உடன்பாடு உள்ளது. வெகு விரைவில் அமைச்சரவை பட்டியலை முதல்வர் வெளியிடுவார்” என்று கூறினார்.

பின்னர் பேசிய நமச்சிவாயம், “கூட்டணி இருந்தால் பேச்சுவார்த்தை நடைபெறத்தான் செய்யும். விட்டுக்கொடுத்துச் செயல்படுவதுதான் தர்மம். பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனைத்து வகையிலும் செயல்பட்டு மக்கள் திட்டங்களை நிறைவேற்றுவோம். கொரோனா நிதி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நிவாரண உதவி வழங்கப்படும்” என்றார்.

துணை முதல்வர் பதவி தொடர்பாக, தேசிய தலைமை முடிவெடுத்து, அதன்பின் முதல்வர் அறிவிப்பார் என்று இருவரும் கூறினர்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 6 ஜுன் 2021