மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

தடுப்பூசி: மீண்டும் உலகளாவிய டெண்டர்!

தடுப்பூசி: மீண்டும் உலகளாவிய டெண்டர்!

கொரோனா தடுப்பூசி டெண்டர் எடுக்க எந்த நிறுவனமும் முன்வராததால் மீண்டும் ஆய்வு செய்து டெண்டர் விடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசி வழங்கி வரும் நிலையில், 18-45 வயதுள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்காக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யத் தமிழக அரசு முடிவு செய்தது.

5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்குவது தொடர்பாக, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த டெண்டருக்கு ஜூன் 5ஆம் தேதிக்குள் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

பாரத் பயோடெக், சீரம், ஃபைசர், மாடர்னா, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி என பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக அரசின் டெண்டருக்கு ஒரு நிறுவனங்கள் கூட விண்ணப்பிக்கவில்லை.

இதுதொடர்பாக உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், “உலகளவில் டெண்டர் கோரிய நிலையில் டெண்டரை எடுக்க எந்த நிறுவனமும் முன் வரவில்லை. இது போன்று எந்த நிறுவனங்களும் டெண்டரை பெற முன்வராததற்கு மத்திய அரசுதான் காரணம் என கூறுவது அபத்தமாக இருக்கும். முதல்வருடன் ஆலோசித்து விரைவில் மீண்டும் ஒரு முறை டெண்டர் கோரப்படும்" என்றார்

உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பது குறித்தும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்ட் அமைந்துள்ள பகுதி மற்றும் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளைச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

ஞாயிறு 6 ஜுன் 2021