மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

பிளஸ் 2 தேர்வு ரத்து: ராமதாஸ் வரவேற்பு!

பிளஸ் 2 தேர்வு ரத்து: ராமதாஸ் வரவேற்பு!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

இந்தாண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என ஒன்றிய அரசு அறிவித்ததையடுத்து, பல மாநிலங்களும் பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்தன.

இந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு குறித்த ஆழமான ஆலோசனைகளுக்குப் பிறகு மாணவர்களின் மனநலன் மற்றும் உடல்நலன் கருதி பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்வதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு அறிவித்தார். மதிப்பெண் வழங்குவது குறித்து பரிந்துரைகளை வழங்கிட குழு அமைக்கப்படும். அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்விக்கான சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்து அறிவிக்கப்பட்டதற்கு கல்வியாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், “சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்பட்டதால், தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படும் என்று மாணவர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதன்படிதான் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. மதிப்பெண் வழங்குவதில் மட்டும் கவனமாக செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில், “தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சி இதைத்தான் வலியுறுத்தியது. நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற உறுப்பினர் M H ஜவாஹிருல்லா ட்விட்டரில், “பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து உயர்கல்விக்குச் செல்ல மதிப்பெண் அடிப்படையில் அனைத்து உயர்கல்வி மாணவர் சேர்க்கை மாநில கல்வி திட்டத்தின்படி நடைபெறும் என்ற தமிழ்நாட்டு முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன். நீட்டைத் திணிக்க நினைப்போருக்கு பெரும் கவலை” என்று பதிவிட்டுள்ளார்.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

ஞாயிறு 6 ஜுன் 2021