மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

தமிழகத்தில் 21 ஆயிரமாக குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் 21 ஆயிரமாக குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று (ஜூன் 5) ஒரே நாளில் 21,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,16,812 ஆக அதிகரித்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 11,652 பேர் ஆண்கள், 9,758 பேர் பெண்கள் ஆவர்.

தனியார் மருத்துவமனைகளில் 166 பேர், அரசு மருத்துவமனைகளில் 277 பேர் என இன்று மட்டும் 443 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்தபலி எண்ணிக்கை 26,571 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 32,472 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை 19,32,778 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று மட்டும் 1,75,365 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 2,57,463 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் 1789 பேரும்,செங்கல்பட்டில் 862 பேரும், கோவையில் 2663 பேரும், ஈரோட்டில் 1569 பேரும், சேலத்தில் 1171 பேரும், திருப்பூரில் 1104 பேரும், தஞ்சையில் 929 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டில் 41 பேரும், சென்னையில் 62 பேரும், கோவையில் 43 பேரும், ஈரோட்டில் 24 பேரும் சேலத்தில் 20 பேரும், வேலூரில் 15 பேரும், நாகையில் 13 பேரும், திருவள்ளூரில் 14 பேரும், திருப்பூரில் 11 பேரும் கொரோனாவால் பலியாகினர்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 5 ஜுன் 2021