மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்!

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்றும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகளை செயல்படுத்த அலுவலர்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என ஒன்றிய அரசு கடந்த 2015ஆம் ஆண்டு அறிவித்தது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதியன்று மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ரவீந்திரநாத் எம்.பி., மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், மருத்துவமனை கட்டுமான பணிகள் மட்டும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்குவதற்காக 27-1-2019 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. மருத்துவமனை கட்டுவதற்கான நிலத்தை மாநில அரசு ஒன்றிய அரசுக்கு வழங்கியது. இருப்பினும், சுற்று சுவர் தவிர, மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

இம்மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு, சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அதிகாரம் குழுக்களுக்கு வழங்கப்படவில்லை என்பதும் தெரிகிறது.

மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை சார்பாக தற்காலிகமான இடத்தில் மருத்துவமனை தொடங்குவதற்கான பரிசீலனைகளும் உள்ளன. இது மேலும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தாமதமாக கூடும்.

அதனால், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்குப் பணிகளை செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட ஒன்றிய அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கும்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பாக தற்காலிகமான இடத்தில் மருத்துவமனை தொடங்கி வெளிப்புற நோயாளிகள் பிரிவை உருவாக்க முடியுமா என்பது குறித்து ஜூன் 11ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

சனி 5 ஜுன் 2021