மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

மருமகனுக்கு உயர் பதவி: தேசிய அரசியலுக்குத் திரும்பும் மம்தா

மருமகனுக்கு உயர் பதவி:  தேசிய அரசியலுக்குத் திரும்பும்  மம்தா

தலைமைச் செயலாளரை திரும்பப் பெற மறுத்தல், பிரதமர் மோடியுடன் மோதல் என ஆட்சி ரீதியான நெருக்கடிகளில் சிக்கியிருந்தாலும் திருணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி தன் கட்சியில் அதிரடி மாற்றங்களைச் செய்திருக்கிறார்.

மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி இன்று (ஜூன் 5) திருணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சட்டமன்றத்தேர்தலுக்கு முன் பாஜகவின் நெருக்கடியால் திருணமூல் காங்கிரஸின் முக்கிய புள்ளிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தனர். அப்போது அவர்கள், ‘கட்சியில் மம்தாவின் மருமகன் ஆதிக்கம் நிலவுகிறது. நாங்கள் மதிக்கப்படுவதில்லை’ என்று குற்றம் சாட்டினார்கள். ஆனால் தேர்தலில் திருணமூல் காங்கிரஸ் பெரும் வெற்றிபெற்று மூன்றாம் முறையாக ஆட்சி அமைத்தார் மம்தா. தேர்தலுக்கு முன் கட்சியை விட்டு பாஜகவுக்கு போன பலரும் மீண்டும் திருணமூல் கட்சிக்கே திரும்பினார்கள்.

இந்த நிலையில்தான்... இன்று நடந்த திருணமூல் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டத்துக்குப் பின் டைமண்ட ஹார்பர் தொகுதி எம்பியும், கட்சியின் இளைஞரணிச் செயலாளராகவும் இருந்த அபிஷேக்கை தேசியப் பொதுச் செயலாளராக உயர்த்தியிருக்கிறார் மம்தா.

அபிஷேக் வகித்து வந்த இளைஞரணிச் செயலாளர் பதவி திருணமூல் காங்கிரஸின் முன்னணி பிரமுகருமான சயோனி கோஷுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேசியப் பொதுச் செயலாளராக தன் மருமகனை நியமித்ததன் மூலம் மம்தா வரும் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மீண்டும் தேசியப் பிரவேசத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார் என்ற குரல்கள் டெல்லியில் எழுந்துள்ளன. அதன் முதல் கட்டமாக தனக்கு நம்பகமான முகம் டெல்லியில் தேவை என்பதால்தான் அபிஷேக் தேசிய பதவிக்கு உயர்த்தப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

-வேந்தன்

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

சனி 5 ஜுன் 2021