மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

கேட்டது தையல் மிஷின், கிடைத்தது கல்லூரி பயில வாய்ப்பு!

கேட்டது தையல் மிஷின், கிடைத்தது கல்லூரி பயில வாய்ப்பு!

அரியலூர் மாவட்டத்தில் தையல் மிஷின் வாங்கி தருமாறு உதவி கேட்ட பெண்ணிற்கு, மேல் படிப்புக்கும் உதவி செய்கிறேன் என பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், செந்துறை ராயல்சிட்டி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த சந்திரா என்பவர், தமது வாழ்வாதாரத்திற்காக தையல் மிஷின் வாங்கி தருமாறு பிற்படுத்தபட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், ‘எதுவரை படித்திருக்கிறாய்’ என்று கேட்டதற்கு ’12 ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறேன்’ என்று அப்பெண் கூறினார். ’கண்டிப்பாக, தையல் மிஷின் வாங்கி தருகிறேன்; காலம் முழுவதும் தையல் மிஷினே வாழ்க்கையாகிடும்’. அதனால் மேல் படிப்புக்கும் உதவி செய்கிறேன். கல்லூரியில் சேர்ந்து நன்றாக படித்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்’ என அந்த பெண்ணிடம் அமைச்சர் கூறினார்.

அந்த பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு தனது உதவியாளரிடம் அறிவுறுத்தினார்.

இதுகுறித்தான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 5 ஜுன் 2021