மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

ஊரடங்கு நீட்டிப்பு: எவை எவை இயங்க அனுமதி?

ஊரடங்கு நீட்டிப்பு:  எவை எவை இயங்க அனுமதி?

தமிழகத்தில்  ஜூன் 14ஆம் தேதி வரை, மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தடுக்க மே 31, ஜூன் 7  என இருமுறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.  இந்நிலையில், நேற்று முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் ஜூன் 7ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதில், சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல்,  தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை  ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.  எனவே இம்மாவட்டங்களில் நோய் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் அதேசமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் மேற்காணும் 11 மாவட்டங்களில் கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஜூன் 7 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

காய்கறி பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

அனைத்து அரசு அலுவலகங்களும் 30சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளைக்கு 50 சதவிகித டோக்கன் மட்டும் வழங்கப்பட்டு பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50சதவிகித பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படும்.

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தளார்வுகளோடு சேர்த்து, தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளுடன் அனுமதிக்கப்படும்.

மின் பணியாளர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

மின் பொருட்கள் மற்றும் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

ஹார்ட்வேர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

வாகனங்களின் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி செயல்பட அனுமதிக்கப்படும்.

கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும் வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.

கொடைக்கானல், ஏற்காடு, நீலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக செல்ல தொடர்புடைய மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின் ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும் மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும் 10 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படும்.

தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்குக் காய்கறி, பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம் பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இது தொடர்ந்து செயல்படுத்தப்படும். பொதுமக்கள் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும், பொது போக்குவரத்து டாஸ்மாக் மதுபான கடைகள், தேநீர் கடைகள் மற்றும் சலூன்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

-பிரியா

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

சனி 5 ஜுன் 2021