மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

தனியார் ஹோட்டலில் ஓபிஎஸ்-இபிஸ் திடீர் சந்திப்பு!

தனியார் ஹோட்டலில் ஓபிஎஸ்-இபிஸ் திடீர் சந்திப்பு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் இன்று (ஜூன் 5) காலை சென்னையில் ஒரு தனியார் ஹோட்டலில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

நேற்று (ஜூன் 4) எடப்பாடி பழனிசாமி திடீரென அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்து சென்னையின் சில மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களை சந்தித்துப் பேசிய நிலையில் அதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து கேட்கப்பட்டபோது, “எனக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை” என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி.

மேலும் சசிகலாவின் தொண்டர்களுடனான உரையாடல் பற்றி கடுமையாக விமர்சித்தார் எடப்பாடி. “சசிகலா அதிமுகவிலேயே இல்லை. அவர் அரசியலை விட்டே விலகப்போவதாக சொல்லிவிட்டார். அவர் அதிமுக தொண்டர்களுடன் பேசவில்லை” என்று கூறியிருந்தார்.

சசிகலா விவகாரம் பற்றி ஓ.பன்னீர் செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றிய நிலையில், நேற்று இரவு கே.பி.முனுசாமியிடம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் பேசியிருக்கிறார்கள்.

“இப்போது அதிமுக ஆளுங்கட்சி அல்ல எதிர்க்கட்சியாகத்தான் இருக்கிறோம். ஆளுங்கட்சியாக இருந்தபோதே ஆட்சியின் தலையீடு கட்சியில் அதிகமாக இருந்தது. அவ்வாறு இருக்கக் கூடாது என்று சொல்லி வந்தார் ஓபிஎஸ். இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில் கூட ஒருங்கிணைப்பாளரிடம் எந்த ஆலோசனையும் நடத்தாமல் முக்கிய விஷயங்களில் கருத்து தெரிவிப்பது முறையா?” என்று சற்று கடுமையாக கேட்டிருக்கிறார்கள். இந்தத் தகவலை கே.பி.முனுசாமி எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

மீண்டும் அதிமுக தலைமை அலுவலகத்தில் சந்திப்பை ஏற்பாடு செய்யாமல் எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலான ரேடிசன் ப்ளூவில் சந்திப்பு நடந்திருக்கிறது. இந்த சந்திப்பு மூலம் இருவருக்கும் இடையிலான பிரச்சினைகள் தீர்க்கப்படுமா அல்லது இடைவெளி அதிகமாகுமா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது.

- வணங்காமுடி, வேந்தன்

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

சனி 5 ஜுன் 2021