மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

மீண்டும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு?

மீண்டும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு?

தமிழகத்தில் ஜூன் 7 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், அதனை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கலாம் என்று நேற்று நடைபெற்ற முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் 35 ஆயிரத்தைக் கடந்த தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைய நிலவரப்படி 22 ஆயிரமாகக் குறைந்துள்ளது. இதற்குக் காரணம் ஊரடங்கு அமலில் இருப்பதுதான்.

கடந்த மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, முதலில் மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து பரவல் அதிகரிப்பின் காரணமாக, மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின் ஜூன் 7 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதனிடையே அவர், ”தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வருகிறது என்றாலும் அது திருப்தி அளிக்கவில்லை” என்று தெரிவித்தார். அதே சமயத்தில், “ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை” என்றும் கூறினார்.

இதனால் ஜூன் 7ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று மீண்டும் முதல்வர் ஸ்டாலின், ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. திரிபாதி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது சென்னை போன்ற பகுதிகளில் பாதிப்புகள் குறைந்தாலும், சில மாவட்டங்களில் தொற்று பரவல் குறையவில்லை என மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. எனவே மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் சிறு தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டதாகவும், சிறு தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

சனி 5 ஜுன் 2021